Humble Ajith

அங்க நிக்கிறாரு அஜீத்!
நெகிழ வைத்த முதல் நாள் படப்பிடிப்பு  

அங்க நிக்கிறாரு அஜீத்!
நெகிழ வைத்த முதல் நாள் படப்பிடிப்பு

'அதாண்டா அஜீத் ஸ்டைலு' என்பது போலவே ஒவ்வொரு முறையும் நடந்து கொள்வார் அஜீத். எளிமையே உன் பெயர்தான் அஜீத்தா? என்று புல்லரித்துப் போகிற சினிமாக்காரர்கள் அவருக்கான இமேஜில் ஆளுக்கொரு செங்கல்லை அடுக்கி கோபுரத்தில் உட்கார வைத்துவிட்டார்கள் அவரை.

இந்த உயரத்தை இன்னும் இன்னும் என்று அவர் கூட்டிக் கொண்டே போவதுதான் ஆச்சர்யம். அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை இதற்கு உதாரணமாக சொல்கிறார்கள் அவரது படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்கள் சிலர்.

சமீபத்தில்தான் சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்க துவங்கினார் அஜீத். முதல் நாள் படப்பிடிப்பு. அந்த டீமில் யாருடனும் அவ்வளவு அதிகம் பழகியிருக்கவில்லை அஜீத். சிறுத்தை சிவா கதை சொல்ல வந்த இடத்தில் மட்டுமே பழக்கம்.

இப்படத்தில் விதார்த் மாதிரி இன்னும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் முன்னணி நடிகர்கள் சிலரும் இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரும் அஜீத்தின் முதல் ஷாட்டை ஆர்வத்தோடு பார்க்க காத்திருந்தார்கள். சிறுத்தை சிவாவுக்கும் ஒரு சின்ன குழப்பம். அஜீத்தை தனியாக கேமிராவுக்கு முன் நிற்க வைத்து சென்ட்டிமென்டாக ஒரு வசனத்தை பேசி நடிக்க வைப்பதா? அவருக்கான முதல் ஷாட்டை எப்படி கம்போஸ் செய்வது? இப்படியெல்லாம் குழம்பி போனார். இருந்தாலும், 'சார்... நீங்க கேமிராவுக்கு முன்னாடி நின்னீங்கன்னா ஒரு குளோஸ் அப் வச்சு முதல் ஷாட்டை சென்ட்மென்ட்டா எடுத்துரலாம்' என்றார்.

லேசாக சிரித்துக் கொண்ட அஜீத், 'என்னை வச்சு எடுக்கிற ஷாட்டை அப்புறம் கூட எடுத்துக்கலாம். முதல்ல வளர்ந்து வர்ற ஸ்டார்சை கவனிங்க. விதார்த்துடன் மற்றவங்களையும் நிற்க வைச்சு முதல் ஷாட் எடுங்க. நான் ஆர்வமா வேடிக்கை பார்க்கிறேன்' என்று பெருந்தன்மையாக சொல்ல, ஆடிப் போனார்களாம் அத்தனை பேரும்.

அதுவும் விதார்த் நெகிழ்ச்சியின் உச்சத்திற்கே போய் விட்டார். 'தல கூட நாங்களும் வர்ற மாதிரி ஷாட் வைங்க' என்று ஆளாளுக்கு கேட்க, அந்த முதல் ஷாட்டில் எல்லாரும் நிறைந்து நிற்க அவ்வளவு அம்சமாக படமாக்கப்பட்டதாம் அது.

இப்படி சொல்லுங்க, 'அதாண்டா அஜீத்!'

http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2013/apr/160413.asp

Courtesy : tamilcinema.com

0 comments:

Post a Comment